இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரானாவால் 9 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 451 பேர், வெளிநாட்டினர் 41 பேர் ஆவார்கள். இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலாய் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.