Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தம்!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று கூறியது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து விழுப்புரம், வேலூர், ஆரணி, உள்ளிட்ட குறைந்த தூர ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்ட எல்லைகள் மூடப்பட உள்ளதால் சென்னையிலிருந்து நீண்ட தூர ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வரும் நிலையில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போதே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |