Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சென்னை கோயம்பேட்டில் இன்று மதியம் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கம்!

கோயம்பேட்டில் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வர உள்ள நிலையில் 2 மணிக்கு பிறகு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து திருச்சி, மதுரைபேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விழுப்புரம், வேலூர், ஆரணி உள்ளிட்ட குறைத்த தூர ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஊர்களுக்கு பயணிகள் சென்று வரும் நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அதனால் கொரோனா வைரஸ் பரவ அதிகவாய்ப்பிருப்பதால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |