டெல்லி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
पिछले 24 घंटों में दिल्ली में कोई नया केस नहीं आया। 5 लोग इलाज करवाकर जा चुके हैं। अभी खुश नहीं होना। अभी सबसे बड़ी चुनौती है किसी भी अवस्था में स्थिति को बेक़ाबू नहीं होने देना। इसमें आप सबका सहयोग चाहिए। pic.twitter.com/e4GynrLopC
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 24, 2020
ஆனால் இதனால் தற்போது மகிழ்ச்சி இல்லை. மிகப்பெரிய சவால் இப்போது நம்மிடம் இருக்கிறது. இன்னும் சூழல் மாறவில்லை. நிலைமை நமது கட்டுப்பாட்டில் இல்லை. மக்களாகிய நீங்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500ஐ நெருங்கும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10ஆக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.