Categories
உலக செய்திகள்

குடும்பத்தையே கொன்ற கொரோனா… விரக்தியில் இழந்த நபர் எடுத்த சோக முடிவு..!

இத்தாலியில் கொரோனா தாக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் ஹோட்டலின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் கண்கலங்க வைக்கிறது 

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக உயிரிழப்பை சந்தித்து வந்த சீனாவை விட, இத்தாலி உயிரிழப்பில் முடிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சீனாவில் 3,270 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது அதிகம் என்றாலும் இத்தாலியை விட குறைவுதான்.

இந்த கொடிய கொரோனா நாளுக்குநாள் வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த இத்தாலி திணறி வருகிறது. தற்போது கொரோனாவால் அதிக பேர் உயிரிழந்த நாடாக இத்தாலி  மாறிவருகிறது. இத்தாலியில் பெரும்பாலான குடும்பங்கள் கொரோனா காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்து தவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அங்கிருக்கும் சமூக ஊடகங்களில், நபரொருவர் அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தற்கொலை செய்துகொண்ட அந்த நபர் பெயர் நெட்லி எனவும், கொரோனா தாக்கத்தால் இவரது தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தை என தன்னுடைய முழு குடும்பத்தையும் இழந்ததால், அதன் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |