Categories
Uncategorized தேசிய செய்திகள்

வருமான வரி, ஜஎஸ்டி தாக்கல் செய்ய அவகாசம் …. ஏடிஎம்களில் சேவை கட்டணம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12% இல் இருந்து 9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரூ.5 கோடிக்கு கீழ் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி தாமதத்திற்கான அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும், மார்ச், ஏப்ரல், மே மாத ஜிஎஸ்டியை ஜூன் இறுதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆதார் – பான் அட்டைகளை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அடுத்த 3 மாதங்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை. அனைத்து ஏடிஎம்களிலும் சேவைக்கட்டணமின்றி பணமெடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |