கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
இதனால் அதுக்கேற்றார் போல சிறப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. வென்டிலேட்டர்கள், மாஸ்க், மருந்துப் பொருட்கள் போன்றவை தேவையான அளவு இருக்க வேண்டும், மேலும் மருத்துவமனையில் ஆய்வகம், தனிமைப்படுத்தல் வார்டு ஆகியவற்றை கூடுதலாக ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதால் இத்தகைய முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.யை