தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படுமென்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் அமல் ஆக இருக்கக் கூடிய நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்குவதில் எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது. அதனை சீராக பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய பணிபுரியக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர்கள் கும்பலாக செல்லாமல், சுழற்சி முறையில் செல்லவேண்டும். மிகுந்த பாதுகாப்பாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பணியில் எவ்வித தொய்வும் ஏற்படாமல், பொதுமக்களிடமிருந்து எந்த புகாரும் வராத அளவுக்கு பணி செய்ய வேண்டும்.
குடிநீருக்கு தட்டுப்பாடு வராத அளவுக்கு குடிநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட அறிவுரை என்பது குடிநீர் வாரிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.