தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பகுதியில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி செய்வார்கள் என்று குடிநீர் வடிகால் வாரியம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் தடை காலத்திலும் பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் வாரியம் சார்பாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துதாக அறிவித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் குறைபாடு இன்றி உடனுக்கு உடன் குடிநீர் வழங்கும் பணியில் ஊழியர்கள் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.