உயிருக்கே உலை வைக்கும் இதய நோய் எதனால் வருகிறது.? வராமல் இருக்க செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டிய உணவுகள், இவைகளை பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.? இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான குறிப்பு இறுதிவரை படியுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகும்.
உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சும் முக்கியமான வேலையை செய்வது இதயம். இது இயங்க ரத்தம் தேவை, அந்த ரத்தத்தை வழங்குவது கரோனரி ரத்தக்குழாய்கள். இவற்றில் கொழுப்பு அடைத்துக் கொள்வதாலோ, இரத்தம் உறைந்து போவதாலோ அடைப்பு ஏற்படுகிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவுச் சத்துகள் கிடைப்பது தடைபடும். அப்பொழுது இதயம் துடிப்பதற்கு சிரமப்படும், இதுதான் மாரடைப்பு.
உயிருக்கே உலை வைக்கும் இந்த இதய நோய் எதனால் வருகிறது.? இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.? தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைகளை பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.? இதய நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தவறாமல் இறுதிவரை படியுங்கள்.
மன உளைச்சல்:
இதய நோய் ஏற்படுவதற்கு மன உளைச்சல் மிக முக்கிய காரணமாக இருக்கும். எந்த நேரமும் முன்கோபம் உடையவர்களை, மன உளைச்சல் உள்ளவர்களை இதய நோய் அதிகம் தாக்கும் என ஆய்வு கூறுகிறது. எனவே இதை கட்டுப்படுத்த முதலில் மன உளைச்சலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
உணவு பழக்கம், உடற்பயிற்சி:
மனிதன் உயிர்வாழ கொலஸ்ட்ரால் அவசியம். உடலுக்குத் தேவையான, மிகக்குறைந்த அளவு கொலஸ்ட்ராலை கல்லீரலே தயாரிக்கும் திறன் உடையது. இந்த சிறப்புமிக்க கொலஸ்ட்ரால் உடலில் 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லிகிராம் முதல் 160 மில்லிகிராம் வரை இருப்பதுதான் சிறந்தது. இது அதிகரித்தால் LDL கொலஸ்ட்ரால் அதாவது கெட்ட கொழுப்பாக ரத்த குழாய்களில் படிகிறது. இவை நாம் உண்ணும் உணவுகளின் வாயிலாக அதிகமான கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேர்த்து விடும். எனவே கட்டுப்பாடான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி அவசியம்.
உயர் ரத்த அழுத்தம்:
இரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உண்டு. அதாவது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இது அமைதியாக கொல்லும். அதிக அளவு உப்பு சேர்ப்பது. மன உளைச்சலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயாளிகளுக்கு கரோனரி குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் உடல் பருமனையும் அதிகரிக்க, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் அனைத்தும் இணைந்து இதயத்தில் நோய் ஏற்பட வழிவகை செய்கிறது.
உடல் பருமன்:
உடல் பருமன் உடையவர்களுக்கு இதயநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் சராசரியாக மாதத்திற்கு 2 முதல் 3 கிலோ எடையை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடல் உழைப்பு :
உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும், சாதாரண வேலைக்கு கூட அடுத்தவர்களின் உதவியை நாடுவது, இதுவும் இதயநோய் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே நம் அன்றாட பணிகளை நாமே செய்து உடலுக்கு உறுதியை ஏற்படுத்த வேண்டும்.
புகை பிடித்தல், மது:
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் இதனாலும் இதய நோய் ஏற்படும். புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும், மது குடிப்பது இவை இரண்டும் இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும்.
மாரடைப்பு வராமல் தடுக்க கட்டாயம் செய்ய வேண்டியது:
* கறிவேப்பிலையை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் நடைபயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்
* உணவில் தவறாமல் மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* முக்கியமாக நன்றாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
* திரிபலா, செம்பருத்தி, புதினா, கொத்தமல்லி இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* மனதில் எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை :
- பாமாயில்
- டால்டா
- முட்டையின் மஞ்சள் கரு
- இறைச்சி வகைகள்
- பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்
- முந்திரி
- அப்பளம்
- எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள்
- செயற்கை இனிப்புகள்
- நொறுக்குத் தீனிகள்
- பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். பொதுவாக 40 வயதிற்கு பிறகு உப்பு, இனிப்பு, கொழுப்பு இம்மூன்றையும் குறைத்துக் கொள்வது மிக நல்லது. இதை இதய நோய் வந்தவர்கள் மற்றும் வயதானவர்கள் 30 வயதை கடந்தவர்கள் கட்டாயம் பின்பற்றுங்கள் மாரடைப்பின் பயம் இல்லாமல் வாழலாம்.