கன்னி ராசி அன்பர்களே..! இன்று முயற்சியின் பெயரில் தான் சில காரியங்களை நீங்கள் செய்ய முடியும். நிதானத்துடன் நடந்து கொண்டால் காரிய வெற்றி ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். மனமும் அமைதியாக காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். சில காரியங்கள் கொஞ்சம் தாமதமாகவே நடக்கும். பணவரவை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. புதிய நபர்களின் அறிமுகத்தால் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது நிதானமாக ஓட்டிச் செல்லுங்கள்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்