காவல்துறையினருக்கு நன்றி தெரிவியுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
சமூக விலகலே கொரோனா பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது. கொரோனா நம்மை தக்கது என்று யாரும் நினைக்க கூடாது. பிரதமர் .கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கம். இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு . ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
21 நாட்களில் ஆக்கபூர்வமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். சுயகட்டுப்பாடு இல்லை எனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். மருத்துவர்கள் தவிர மற்ற யாரும் ஊரடங்கில் அனுமதி இல்லை. நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களை , உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டியது முதற்கட்ட தேவையாக உள்ளது. கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் மிகவும் முக்கியமானது என்று மோடி தெரிவித்தார். காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள். 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம் வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.