Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? Jio செயலி உதவியுடன் கண்டறியலாம்!

ரிலையன்ஸ் ஜியோ தனது கொரோனா வைரஸ் அறிகுறி சரிபார்ப்பு கருவியை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவியை myjio செயலி மூலம் மக்கள் அணுகலாம். ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் myjio பயன்பாட்டைத் திறக்கும்போது கொரோனா அறிகுறி சரிபார்ப்புக்கான பேனரைப் பார்க்க வேண்டும். ஜியோவின் இணையதளத்தில் இந்த கொரோனா அறிகுறி சரிபார்ப்பை ‘Corona Harega’ பேனரின் கீழ் காணலாம்.

கொரோனா அறிகுறி சரிபார்ப்பை கண்டுபிடிக்க இந்த வசதியினை பின்தொடரவும். ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறி கொண்டுள்ளாரா என என்பதை தீர்மானிக்க தொடர்ச்சியான கேள்விகளை கேட்கிறது. யாருக்கு டெஸ்ட் எடுக்க போறீர்கள்? – உங்களுக்கா, உங்களது பெற்றோர்களுக்கா அல்லது குழந்தைகளுக்கா? என கேட்கிறது.

அடுத்த உங்கள் பாலினம் – ஆண், பெண் என கிளிக் செய்ய கூறுகிறது. வயது குறித்த தகவல்களை கேட்கிறது – 12 வயதை விட குறைவானவரா? 120-50 வயதுக்குள்ளா? 51- 60 வயதுக்குள்ளா? அல்லது 60 வயதுக்கு மேலா? என கேட்கப்படுகிறது. அதன் பின்னர் உங்கள் ஆரோக்கியம் குறித்த கேள்வி எழுகிறது. ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை, நீரழிவு, இதய நோய் இவற்றில் ஏதேனும் உள்ளதா? அல்லது கர்ப்பிணியா என கேட்கப்பட்டுகிறது.

பின்னர் உங்கள் உறுப்பினர் அல்லது நீங்கள் கடந்த 14 நாட்களில் சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்று திருப்பினாரா? என கேட்கிறது. உங்கள் உறுப்பினர் அல்லது நீங்கள் கடந்த 14 நாட்களில் இந்தியாவில் உள்ள ஊர்களுக்கு பேருந்து போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்தனரா?

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் உடன் தொடர்பின் இருந்தீர்களா? என்பன உள்ளிட்ட கேள்விகள் அடுக்கடுக்காக கேட்கிறது. அதனை தொடர்ந்து உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? தலைவலி, இருமல், சளி தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதா? என கேள்விகளை முன் வைக்கிறது. கொடுக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் பயனரின் நிலையை தீர்மானிக்கிறது.

பயனர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவர்களை அணுகவும் அறிவுறுத்தப்படுகிறது. இறுதியாக சோதனை மையங்களின் பட்டியல், கொரோனா பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் தேசிய மற்றும் மாநில ஹெல்ப்லைன் எண்களையும் ஜியோ பட்டியலிட்டுள்ளது. பயனர் உண்மையில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதன் இறுதி முடிவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |