Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு தான் பொறுத்துக்கொள்ள முடியும்.

2.  நத்தைகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறங்க முடியும்.

3. கரையான் ஒரு நாளைக்கு 30,000 முட்டை இடும்.

4. ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை  எளிதாக கண்டுபிடித்து விடும்.

5. பூனையின் கண்பார்வை மனிதனைவிட 8 மடங்கு கூர்மையானது.

6. உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர்.? – மொரார்ஜி தேசாய், இவர் 1977 மார்ச் 24ல் பாரத பிரதமராக பதவி ஏற்ற போது வயது 81 .

7. விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர்.? –  ஆல்டி மீட்டர்

8. உலகிலேயே மிகவும் குளிர்ந்த இடம்.? –  ரஷ்யாவில் உள்ள சைபீரியா

9. உலகிலேயே வெப்பமான இடம்.? –  லிபியாவில் உள்ள அசிஸியா

10.  ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட ஆண்டு.? –  1945 அக்டோபர் 24

11. முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு.? – சீனா

12. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு.? –  சுவிட்சர்லாந்து

13. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு.? –   சான்மரினோ

14. உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்.? –  முதலை இவை 300 ஆண்டுகள் வரை வாழும்

15. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு.? –  ஐக்கிய ராஜ்யம்

16. உலகிலேயே துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு.? –  ஸ்பெயின்

17. உலகிலேயே மிகப்பெரிய நூலகம்.? –  மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்

18. திரையரங்குகள் இல்லாத நாடு.? –  பூட்டான்

19. உலகிலேயே உயரமான சிகரம்.? –  எவரெஸ்ட் இதன் உயரம் 8848 மீட்டர்கள்

20. உன்னி எனப்படும் எந்த பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியில் உயிருடன் இருந்து ஐஸ் கரைந்த பின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.? – தெள்ளுப்பூச்சி 

21. கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள நீர்யானையின் தோலில் ஒருவித இளஞ்சிவப்பு நிற திரவம் சுரந்து குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

22.  அனப்லெப்ஸ் மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழிகள்  உண்டு.

23. காண்டாமிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல, அவை மிக கடினமான மயிரிழைகளால் உருவானவை.

24. பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

25. பிளாஸ்டிக் எரிக்கும்பொழுது  டயாக்ஸின் என்ற நச்சுப் புகை வெளியேறுகிறது.

26. தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்.? –  பச்சை, நீலம், சிகப்பு

27. முதன் முதல் 1893 ஆம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டது.? –  அமெரிக்கா

28. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர்.? –  ஸ்கியூபா ஆகும்

Categories

Tech |