நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவின் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
#CoronaVirus-ன் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள #21daysLockdown உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்!
— M.K.Stalin (@mkstalin) March 24, 2020