Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… 18 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.

அதில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்  “நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையிலும்,  நியூசிலாந்தில் இருந்து சைதாப்பேட்டை வந்த 55 வயது பெண் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |