உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,07,633 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. ஆனால் சீனாவில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு 10க்கும் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.