மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனோவை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும் அரசாங்கம் உடனடியாக 3000 ரூபாய் வழங்க முன்வரவேண்டும். ரேஷன் கார்டுகள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தாமல் அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகின்ற இந்த நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பிரான்ஸ் நாட்டில் வீட்டை விட்டு வெளியே வந்தால் பத்தாயிரம் பிராங்க் அபராதம் என்று நேற்றைக்கு அந்த அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மருத்துவத்தில் அறிவியல் சாதனைகள் புரிந்த நாடுகளிலேயே இவ்வளவு பெரிய ஆபத்தும், அச்சமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெறுகிறது என்றால் நாம் எவ்வளவு விழிப்பாக கவனமாக இருந்து பேராபத்தான கோவிட் 19 நோயை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, என்பதை நாம் யோசிக்கவேண்டும்.
பொதுமக்களுக்கான வேண்டுகோள் இந்த கட்டுப்பாடுகளை நமக்கு நாமே என விதித்து கொள்ள கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன் முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கம் முழு மூச்சாக இதில் ஈடுபட வேண்டும். என மதிமுக பொது செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.