கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது.
கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசு எச்சரித்துள்ளது. இந்த வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தால் கொரோனா பரவலை முற்றிலும் தவிர்த்து விடலாம் என்பதை கருத்தில் தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற நிர்வாக குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை , தமிழகம் , புதுச்சேரி கீழமை நீதிமன்ற பணிகளை 21 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.