ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி இருப்பதால் இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல ரஷ்யாவின் குரில் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.