Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு – முதல்வர் ஆலோசனை ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்த தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெறுகின்றது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு என்பது ஏற்கனவே தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று பிரதமர் அறிவிப்பு பின்பு முழுவதுமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது, ஊரடங்கை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க இருக்கிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வெளியே வந்து சுற்றித்திரிவதாக புகார் எழுந்த நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வர  முடியாத அளவுக்கு புதிய  உத்தரவுகள் பிறப்பிக்கப்ட வாய்ப்பிருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பிரதமரின் உத்தரவை முழுமையாக தமிழக அரசு பின்பற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றது.

Categories

Tech |