தற்போதைய சூழ்நிலையில் ஏராளமானோர் உடல் எடை குறைப்பது பற்றிய தேடிவருகின்றனர் அவர்களுக்கு ஏற்ற மருந்து
அடுப்பில் பாத்திரம் ஒன்று வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக ஒரு ஸ்பூன் ஓமம் சேர்க்கவும்.
இரண்டு நிமிடங்கள் வரை தண்ணீர் நன்றாகக் கொதிக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் இதனை வடிகட்டி கொள்ளவும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து அருந்த வேண்டும்.
இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க பெரிதும் உதவி புரியும். பத்து நாட்களிலேயே உடல் எடை குறைவதை காணலாம்.