மதுரையில் தேவையின்றி வெளியே வந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது. ஊரடங்கை மீறிய வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்டுகின்றது. மதுரையில் ஊரடங்கு உத்தரவு மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு தலா 100 அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய சாலையில் தேவையின்றி செல்பவருக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.