தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை அமைய இருக்கின்றது.
இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக்க படுகின்றது.
அதோடு தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்க நாலு மருத்துவமனைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளது. தாம்பரம் சானிடோரியம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனாவுக்கு மருத்துமனை அமைகிறது.