Categories
சினிமா தமிழ் சினிமா

தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ!

நடிகை மதுமிதா கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 530க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தியுள்ளார். இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் துறையைச் சேர்ந்த சில பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான மதுமிதா, அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ”தற்போது நாம் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நோய் பரவாமல் இருக்க நாம் நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு முறை கையை கழுவ வேண்டும். வாய், மூக்கு, கண்  ஆகியவற்றை கை கழுவாமல் தொடக் கூடாது.தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.
Image result for madhumitha
சில பேர் 144 தடை உத்தரவை விளையாட்டுக்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தடை உத்தரவின்போது நமது ஊர் எப்படி அமைதியாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு வெளியே  வருவார்கள். தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க.  நீங்கள் எடுக்கும் ரிஸ்க் மூலமாக நம்முடைய அன்பான குடும்பம், குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு இந்த நோய் தொற்று வந்தால் எத்தனை பேருக்கு பரப்ப முடியும் என்பதை நாம் தினம் தினம் செய்திகளில் பார்த்து கொண்டே வருகிறோம்.
எனவே அனைவரும் வீட்டில் இருங்கள், அன்பான குடும்பத்துடன் செலவிடுங்கள்” சீக்கிரமாகவே கொரோனாவை விரட்டியடியோம், சுகாதாரமான தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |