உலர் அத்திப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
அத்திப்பழம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் மேலும் பல நன்மைகள் இதனால் ஏற்படும்.
சாப்பிட்ட பின்னர் ஒருநாள் நாலு துண்டு உலர் அத்தி பழத்தை சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் ஜீரணமாகும். அதுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலோரிகள் குறைவு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மூன்று நான்கு சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை சீராக்கி உதவி புரிகிறது இந்த உலர் அத்திப்பழம்.
கல்லீரல் வீக்கம் இருந்தால் அத்திப்பழங்களை ஒருவாரம் வினிகரில் ஊற வைத்து பின்னர் தினம் இரண்டு துண்டுகளை சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் கல்லீரல் வீக்கம் குணமடையும்.
வாய் புண் இருப்பவர்கள் மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் ஆறும்.