இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.
அவர்களின் விவரம் இதோ :
ரஜினிகாந்த் – ரூ 50 லட்சம்
சிவகார்த்திகேயன் – ரூ 10 லட்சம்
விஜய் சேதுபதி– ரூ 10 லட்சம்
சூர்யா, கார்த்தி – ரூ 10 லட்சம்
வெற்றிமாறன்– ரூ 2 லட்சம்
ஹரிஷ் கல்யாண்– ரூ 1 லட்சம்
நரேன்– ரூ 25,000
ரோஷன்– ரூ 17,000
சச்சு– ரூ 10,000
பார்த்திபன்– 250 அரிசி மூட்டைகள்
கலைப்புலி எஸ் தாணு– 250 அரிசி மூட்டைகள்
பிரகாஷ் ராஜ்– 150 அரிசி மூட்டைகள்