Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23ஆக உயர்வு – அமைச்சர் உறுதி ….!!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் மூலமாக உறுதி செய்திருக்கிறார். இவர்கள் ஐந்து பேரில் 4 பேர் இந்தோனோசியாவில் இருந்து சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளார்கள்.

இவர்களில் ரத்த மாதிரிகள் சென்னையில் வந்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் கடந்த 22ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களுக்கு சேலம் மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை என்பது 23 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் ஒருவர் நேற்று இரவு 2 மணியளவில் இறந்து விட்டார்.

மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் இறந்த நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப் பட்டு மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். மருத்துவ சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 21 ஆக இருக்கிறது .

 

Categories

Tech |