இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,28,193 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 1,09,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. 71 வயதான சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.