சென்னையில் காவல்துறையினருக்கு பெண்கள் இளைஞர் பீர் பாட்டிலால் கழுத்து மற்றும் மார்பில் தன்னைத்தானே குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரி டவுட்டன் பாலம் அருகே வசித்து வருபவர் கார்த்திக். இவரும் நந்தினி என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க நேற்று முன்தினம் மாலை நந்தினி குளித்துக் கொண்டிருப்பதை பக்கத்து வீட்டு முருகன் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர்,
துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வரும் கார்த்திக் வீடு திரும்பியதும் நந்தினி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் முருகனிடம் நேரடியாக சென்று சண்டையிட்டு உள்ளனர். பின் கார்த்திக் வேப்பேரி காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். பின் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த முருகனுடன் கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் கார்த்திகை சமாதானப்படுத்த முயன்ற போதும் அவர் அடங்காததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது காவல் நிலையம் தூக்கி சென்று நம்மை ஏதாவது பண்ணி விடுவார்களோ என்ற அச்சத்தில் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து கழுத்திலும் மார்பிலும் பலமாக குத்திக்கொண்டார் கார்த்திக். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டனர். தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.