துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதிலும் வெற்றி பெறக் கூடிய சூழல் நிலவும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்து செல்வீர்கள், உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள், உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழல் உருவாகும். உங்களுக்கு வரும் தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்களுடைய கற்பனைத்திறன் இன்று கூடும். சிந்தனைத் திறனும் இன்று கூடும். அதுமட்டுமில்லை எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாகவும் இன்றைய நாள் இருக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்