சிம்மம் ராசி அன்பர்களே..! எப்பொழுதுமே சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவ போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடியவர்கள். ஆகையால் இன்றும் அதே போல ஏதும் செய்யாதீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் கடைபிடியுங்கள். வியாபாரத்தில் ஓரளவுதான் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளால் சில மனவருத்தங்கள் ஏற்படக்கூடிய சூழலில் இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலை இன்று நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்.
பணவரவில் எந்தவித மாற்றமுமில்லை. உடல் ஆரோக்கியம் கூட ரொம்ப சிறப்பாகவே இருக்கும். உள்ளமும் மகிழ்ச்சியாகவே காணப்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வது ரொம்ப நல்லது. அதேபோல தேவையில்லாத நபரிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று உறவினர் வருகையால் செலவு கொஞ்சம் கூடும். தயவு செய்து அக்கம் பக்கத்தினர் இடம் மட்டும் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் இருப்பது ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்