இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11ஆக இருந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது. காஷ்மீர் ஸ்ரீநகரில் ஹதிர்போராவை சேர்ந்த 65 வயதான இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் இந்தியாவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.