மருத்துவர்களை, செவிலியர்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களுக்காக சேவையாற்ற நாள்தோறும் மருத்துவமனைகளில் கஷ்டப்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதால் இவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி கட்டாயப் படுத்தி வருகிறார்கள். இது அவர்களுக்கு மனவேதனையை மன அழுத்தத்தை ஒருபுறம் தந்தாலும், இந்த செய்தியை கேட்டு உயிரை பணையம் வைத்து நமக்காக அவர்கள் போராடுகிறார்கள் அவர்களை காலி செய்ய சொல்வது இரக்கமற்ற ஒரு செயலாக கருதப்படுகிறது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்களை காலி செய்ய சொன்னால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார்.