Categories
மதுரை மாநில செய்திகள்

“கொரோனா” பொய்யான வதந்தி…. மதுரை இளைஞர் கைது…..!!

மதுரையில் கொரோனா  குறித்து பொய்யான வதந்திகள் பரப்பி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பி வருவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி, மதுரை கரியமேடு பகுதியில் வசித்து வரும் கார்முகிலன் என்பவர் கொரோனா குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவதாக சிறப்பு சார் அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அந்தப் புகாரின் அடிப்படையில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |