இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது.
195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குஇந்தியா, கொரோனா வைரஸ், உயிரிழப்பு, நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் குணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.