கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று கன்னியாகுமரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் கொரோனாவைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ள நிலையில் தற்போது 8வதாக மதுரையில் ஓர் ஆய்வு மையம் அமைய உள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.