Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு…. எங்க போறீங்க…. மருந்து வாங்க… காட்ட சொல்லிய போலீசார்.. பெண் செய்த செயல்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணை போலீசார் சாலையில் தடுத்து நிறுத்தியதால், அவர் தனது பழைய காயத்தை கடித்து இரத்தத்தை காவல் துறை அதிகாரி மீது பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, ஈரான்,  அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதனுடைய தாக்கம் மிகவும் வேகமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 630க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் அடுத்த 21  நாட்களுக்கு நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு என்ற உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, அத்தியாவசிய தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்ததுடன், எச்சரிக்கையும்  விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்து போனார். இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்துள்ளன. போலீசார் தேவையின்றி வரும் வாகனங்களை எல்லாம் விசாரித்து எச்சரித்து வந்துள்ளனர்.

Image result for WTF this DESPICABLE Woke #COVIDIOT when stopped by police abused & spit on Kolkata Police Cop

இந்த நிலையில், தனது ஆண் நண்பருடன் பெண் ஒருவர் நேற்று மதியம் 12 30 மணியளவில் பேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட்லேக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணை போலீசார் கைகாட்டி நிறுத்தி எங்கே போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அப்பெண் நான் மருந்து வாங்க செல்கிறேன் என்று தெரிவித்தார். சரி, அப்படி என்றால் மருத்துவர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள்  அதை  காட்டவில்லை. இதனால் போலீசார் அவர்களை செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரடைந்த அப்பெண் போலீசாருடன் வாக்கு  வாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர்  தனது பழைய காயத்தை கடித்து ரத்தம் வரவழைத்து, அதனை வெள்ளை சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி மீது அந்தப் பெண் பூசினார். மேலும் என்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை உங்கள் மீது நான் கொடுப்பேன் எனவும் மிரட்டினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் இப்பொழுது வைரலாகி வருகிறது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் போலீசாரிடம் பொது மக்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |