Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதியரை ஒன்றிணைந்த கொரோனா வைரஸ்… நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதியர் தங்கள் குழந்தைகளுக்காக சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியாக உள்ளது. பிரபல ஹிந்தி நடிகரான ஹிரித்திக் ரோஷன் பேஷன் டிசைனிங் துறையை சேர்ந்த சுஸானாவை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு பிரிந்த ஹிரித்திக் ரோஷன், சுஸானாவும் அடுத்த ஆண்டே விவாகரத்தும் பெற்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துள்ளது.

https://www.instagram.com/p/B-JlJZvH0bC/?utm_source=ig_web_copy_link

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ள நிலையில் தனது மகன்களுடன் ஹிரித்திக் ரோஷன் இருந்து வருகிறார். தனது மகன்கள் வீட்டில் தனிமையை உணர கூடாது என்பதற்காக சுஸானா ஹிரித்திக் ரோஷன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள ஹிரித்திக் ரோஷன், சுஸானாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நாடே ஊரடங்கில் இருக்கும் போது பிள்ளைகளின் பெற்றோர் பிரிந்திருப்பது நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். இதோ இந்த புகைப்படத்தில் இருப்பவர் சுஸான் எனது கடந்தகால மனைவி. இந்த கடினமான சூழ்நிலையில் மகனுடன் எனது வீட்டில் வந்து தங்கியிருக்கிறார். எங்கள் பிள்ளைகள் தனியாக இருப்பதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Categories

Tech |