Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக…. புதிய ரோபோ… இந்திய மாணவர் கண்டுபிடிப்பு….!!

கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸ் உலக அளவில் மொத்தம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் மனிதர்களிடையே எளிய முறையில் பரவக்கூடியது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

ஆனால் நாம் உபயோகிக்கும் சோப்பு அல்லது சனிடைசர் பாட்டில்களையும் நாம் கைகளால் தொடும்போது அதில் கிருமிகள் ஒட்டி இருக்கலாம் என்பதை நினைவில் கொண்டு துபாயில் இருக்கக்கூடிய இந்திய மாணவர் ஒருவர் கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ நாம் கைகளால் தொடாமலேயே தானியங்கியாக செயல்படக்கூடியது. மேலும் ஸ்டெம் டெக்னாலஜியால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |