Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்பனை என அறிவிப்பு!

தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

போலீஸ் கட்டுப்பாட்டை தொடர்ந்து நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பில், பால் தட்டுப்பாடு உள்ளதால் சிலர் 1லிட்டர் பாலினை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக தகவல்கள் வருகின்றன.

அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்து புகார் அளித்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |