Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி: காவல்துறை அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறி வெளியே வரும் நபர்களுக்கு நூதன தண்டனையை காவல்துறை அதிகாரிகள் வழங்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இருப்பினும், பல்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் வெளியே வருவது அவசியமாக தான் இருக்கிறது.

இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகர காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “குருகிராம் காவல்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும்: அத்தியாவசிய சேவைகள் / வீடுகள் / கட்டிடங்களை பராமரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பக் கைகளின் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசிய சேவைகளுக்கு இலவச இயக்கம் அனுமதிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது”. அதன்படி, எலெக்ட்ரிசியன், பிளம்பர், ஏசி மெக்கானிக், டிஷ்/கேபிள் டிவி மெக்கானிக், இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவிடர், லிப்ட் டெக்னிஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

Categories

Tech |