கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் 81 ஆயிரத்துக்கும் ஆதிக்கமோருக்கு பாதிப்பை உண்டாக்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிரை காவு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா குறித்து சீனா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக முழுமைக்கும் சீனா வழங்கி வரும் அறிவுரை எச்சரிக்கையாக இருக்கின்றது.அதில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் இறுதிச்சடங்கை அதிக நேரமாக நடத்த வேண்டாம் என்ற எச்சரிக்கையை சீனா உலகம் முழுவதும் விடுத்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த 29 சடலங்களை பிரேத பரிசோதனை செய்ததில் சீன மருத்துவர்கள் அதிர்ச்சி காத்திருந்தது.அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் நுரையீரலில் கொரோனா வைரஸ் அப்படியே இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையான சேபடுத்தியுள்ளதாகவும், மூச்சுக்குழாய் களையும் பாதித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களில் கொரோனா வைரஸ் வலுவாக வாழ்கிறது என்றும் சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.