இட்லி மாவில் தேன் மிட்டாய் ,விடுமுறையில் குழந்தைகளுக்காக செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..!
தேவையான பொருள்:
புதியதாக அரைத்த இட்லி மாவு – 1 கப்
கேசரி போடி – 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
சர்க்கரை – 200 கிராம்
எண்ணெய் – கால் லிட்டர்
செய்முறை:
புளிப்பில்லாத இட்லி மாவு எடுத்து கொள்ளுங்கள், அது நன்கு கெட்டியாக இருக்கவேண்டும். ஒரு கப் மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கலருக்காக ஆரஞ்சு கலர் கேசரிக்கு சேர்க்கும் பொடி ஒரு சிட்டிகை, பேக்கிங் சோடா இந்த இரண்டையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது அதற்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். அதனால் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நாம் கலந்து வைத்திருக்கும் மாவை ஸ்பூன் வைத்து சிறிது சிறிதாக எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்து கொள்ளவேண்டும். எடுத்ததை ஆறவைத்து சர்க்கரை பாகில் போட்டு கிளறி எடுத்து சாப்பிட வேண்டும்.. தித்திப்பான தேன் மிட்டாய் ரெடி..!!