Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கொரோனா” கல்லூரி சேர்க்கை….. ஆந்திரா…. கேரளா…. வலம் வந்த வங்க இளைஞர் கைது….!!

கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை  காவல்துறையினர் கைது செய்து கொரோனா தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் சூழ்நிலையில்,  144 தடை உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற அரசின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர்.

காவல்துறையினரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய வகையில், சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வங்கதேசத்தை சேர்ந்த சுசில் என்ற நபர் என்பதும்,  அங்குள்ள கல்வி நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சென்று விளம்பரம் செய்துவிட்டு ஆள் சேர்க்கை நடத்திய பின் களியக்காவிளை வழியாக தமிழ் நாட்டிற்குள் புகுந்து கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை அருகில் உள்ள தடுப்பு பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனிப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவிற்கு பின்பே அவருக்கு கொரோனா  இருக்கா ? இல்லையா ? என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர். கொரோனா அச்சுறுத்தலினால் பள்ளி கல்லூரி நிறுவனங்களை மூடி விட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில், இளைஞர் ஒருவர் கல்லூரி சேர்க்கைக்காக நாடு முழுவதும் சுற்றி திரிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |