இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது. சமூக பரவல் இல்லை என்றாலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.