Categories
தேசிய செய்திகள்

நீ ஒரு கொரோனா வைரஸ்… சட்டையில் துப்பி… இளம்பெண் மீது இனவெறி தாக்குதல்… சிசிடிவியால் சிக்கிய நபர்!

மணிப்பூர் இளம்பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தி, கொரோனா வைரஸ் என்று கத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர்.. இந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவன் அவர் அருகில் வந்து முகத்திலும், சட்டை மீதும் எச்சில் மற்றும் புகையிலையை காரி துப்பியுள்ளான். அதுமட்டுமில்லாமல் மேலும் அப்பெண்ணை பார்த்து நீ கொரோனா வைரஸ், சீனா கொரோனா வைரஸ் வருகிறது என்று கூறி இனவெறித் தாக்குதல் நடத்தியுள்ளான்.

ஏனெனில் வடகிழக்கு மாநில பெண்கள் முகம் பார்ப்பதற்கு சீனப்பெண்களின் முகம் போலத்தான் சாதாரணமாகவே இருக்கும் இதனால் அப்பெண்ணை அவன் அவ்வாறு செய்திருக்கிறான். இதையடுத்து அப்பெண் புகையிலை துப்பப்பட்ட உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை பார்த்த பலரும் அவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர்.

Image

இந்த கோரிக்கை வலுத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  வைத்து இனவெறி தாக்குதல் நடத்திய 40 வயதான கவுரவ் வோராவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும்  போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில் முதலில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கவுரவ் ,  பின்னர் ஒத்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |