கொரோனா குறிப்பிட்ட சீசன் வியாதியாக மாறி விடக்கூடாது ஆகையால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சீசன் தோறும் பரவக்கூடிய வைரஸாக கொரோனா மாறலாம். என்பதால் தடுப்பு மருந்தையும் எதிர்ப்பு மருந்தையும் பிரித்து கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோலார் பகுதியில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு குளிர் காலத்தை கடந்து எதிர் நோக்கும் நாடுகளில் அதிகரித்தும் இருப்பதாக அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தில் புற்றுநோயியல் ஆய்வுகளுக்கு தலைமை தாங்கும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விட்டாலும் கூட மீண்டும் மறுசுழற்சி முறையில் வந்து விடாமல் இருப்பதற்காக தடுப்பிற்கான தயாரிப்பு அவசியம். எனவே தடுப்பு மருந்தை தெளிவாக உருவாக்கி சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். தற்போது சீனாவிலும், அமெரிக்காவிலும் தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், பயன்பாட்டுக்கு வர 1 அல்லது ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.