Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 126ஆக உயர்வு!

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ நெருங்குகிறது. இந்தநிலையில் கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |