நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் ஏராளாமான நன்மைகள் கிடைக்கின்றன.
இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த ஈ மாத்திரை சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் தரவல்லது என இங்கு விரிவாக காண்போம்.
- கரும்புள்ளிகள் மறைய : வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை பிரித்து அதிலிருந்து என்ணெயை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்துவர கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து விடும்.
- பளபளப்பான சருமத்திற்கு : காபி தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தை அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பளபளப்பாக காணப்படும்.
- சுருக்கங்கள் மறைய : விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். மறுநாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தை பெற முடியும்.
- கருவளையங்கள் மறைய : தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பவுலில் விட்டமின் ஈ எண்ணெய், அதனுடன் சிறிதளவு விளக்கெண்ணையை சேர்த்து நன்றாக கலந்து கருவளையம் மீது அப்ளை செய்யுங்கள். பின்பு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர மிக விரைவிலேயே கண்களுக்குள் கீழ் காணப்படும் கருவளையம் மறைந்துவிடும்.
- அடர்த்தியான புருவத்திற்கு : புருவங்கள் அடர்த்தியாக இருந்தால் தனி அழகுதான். சிலருக்கு புருவத்தில் முடி அதிகமாக இருக்காது. அவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன்புருவத்தில் ஒரு விட்டமின் ஈ மாத்திரையை அப்ளை செய்து மறுநாள் காலை கழுவுங்கள்.
- தழும்புகள் மறைய : இந்த எண்ணெய்யில் இருக்கும் ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு ஊடுருவி இந்தத் தழும்புகளை மறைய செய்கிறது. குழந்தை பெற்றதால் வயிற்றில் வரும் தழும்புகள், உடற் பயிற்சிகள் மூலம் கை கால்களில் வரும் தழும்புகள் என அனைத்தையும் வைட்டமின் ஈ எண்ணெய்யை பயன்படுத்தி மறைய செய்யலாம்.
- வெடிப்புகளை நீக்க : வைட்டமின் ஈ எண்ணெய் பிசுப்பிசுப்பு தன்மை அற்றது என்பதால் நீங்கள் குளித்து முடித்த பிறகு ஒரு மாய்ஸ்ட்ரைஸரை போல இதை உங்கள் உடல் முழுவதும் தடவினால் சில வினாடிகளிலேயே இந்த எண்ணெய்யைச் சருமம் உள் இழுத்துக் கொண்டு மிகவும் மென்மையாக மாறுவதை நீங்களே உணர முடியும்.
- அழகான கூந்தலுக்கு : சிலருக்கு முடி வறண்டு காணப்படும். அவர்கள் ஜோஜோபா (jojoba) ஆயிலுடன், 3 அல்லது 4 துளிகள் வைட்டமின் ஈ ஆயிலை கலந்து தலைமுடியின் வேர்பகுதியில் மென்மையாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் வறண்ட முடி மென்மையாக மாறும்.